தூத்துக்குடி RDO ம.பிரபுவுக்கு புதிய பொறுப்பு... மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக நியமனம்!

தூத்துக்குடி RDO ம.பிரபுவுக்கு புதிய பொறுப்பு... மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக நியமனம்!

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள புதிய பணியிடமாற்ற உத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியராக (RDO) பணியாற்றி வந்த ம.பிரபு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் கே.எஸ். பழனிசாமி வெளியிட்ட உத்தரவின்படி, வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் வே. கல்யாணகுமார் வகித்த காலிப்பணியிடத்தில் ம.பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கடந்த ஜூன் 12 அன்று ம.பிரபுவை டாஸ்மாக் மதுரை (தெற்கு) மாவட்ட மேலாளராக நியமித்து வெளியிடப்பட்டிருந்த அரசாணை தற்போது ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.