காந்தாரி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபர் கைது!!

கயத்தாறு அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காந்தாரி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபர் கைது!!

கயத்தாறு அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அரசன்குளம் கிராமத்தில் காந்தாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா ஆண்டிக்கோனார் என்பவர் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணி திலீப் மற்றும் போலீசார் பருத்திகுளத்தில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருமால் மகன் அன்பரசன் (26) என்பதும், காந்தாரி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் வந்த மோட்டார் சைக்கிள், திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.