தூத்துக்குடியில் பரபரப்பு... ஒரே நாளில் அடுத்தடுத்து 2 போலி டாக்டர்கள் கைது!

தூத்துக்குடியில் மருத்துவம் படிக்காமல் பிரசவம், சிகிச்சை அளித்ததாக 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் பரபரப்பு... ஒரே நாளில் அடுத்தடுத்து 2 போலி டாக்டர்கள் கைது!
தூத்துக்குடியில் பரபரப்பு... ஒரே நாளில் அடுத்தடுத்து 2 போலி டாக்டர்கள் கைது!

தூத்துக்குடியில் மருத்துவம் படிக்காமல் பிரசவம், சிகிச்சை அளித்ததாக 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் டாக்டருக்கு படிக்காமல் வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பதாகவும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் இதனால் உயிர் இழப்புகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சுகாதார நலப் பணிகள் அலுவலக இணை இயக்குனர் சோமசுந்தரம் தலைமையில் அதிகாரிகள் மற்றும் முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜமால் புதுக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை நியூ தெருவில் உள்ள நடராஜர் மகன் கந்தப்பன் (80) வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

சோதனையில் ஒரு தனி அறையில் நோயாளிகளான படுக்க வசதி மற்றும் மருந்து மாத்திரைகள் ஊசிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் குலையன்கரிசலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்பவுண்டர் ஆக வேலை பார்த்து ஓய்வு பெற்றபின் கடந்த 20 ஆண்டுகளாக தனது வீட்டில் வைத்து புதுக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் தட்டப்பாறை அம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் சோதனை செய்ததில் அந்த வீட்டிலும் ஒரு பெண் பிரசவம் பார்ப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் சோதனை செய்ததில் அந்த பெண் வீட்டிலும் அதிகளவு மருந்து மாத்திரைகள் மற்றும் பிரசவம் பார்ப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து ராஜேந்திரன் மனைவி சந்திரா (53), என்பவரை தட்டாபாறை போலீசார் கைது செய்தனர். 

மேலும் இவர் தூத்துக்குடியில் பல தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்ததாகவும் அங்கே ஊசி போடுவது, பிரசவம் பார்ப்பது போன்ற வேலைகளை செய்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடியில் ஒரே நாளில் 2 போலி டாக்டர்கள் பிடிபட்டு இருப்பது பெருமட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது