தூத்துக்குடி மாவட்டத்தில் 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் | விண்ணப்பங்கள் வரவேற்பு | கடைசி தேதி 16.02.2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் | விண்ணப்பங்கள் வரவேற்பு | கடைசி தேதி 16.02.2026

தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடத்திற்கான தகுதி விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.thoothukudi.nic.in�-ல் வெளியிடப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் நகல்களுடன் தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

இரண்டாவது தளம், கோரம்பள்ளம் – 628101,

தூத்துக்குடி மாவட்டம்

என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பலாம்.

16.02.2026 (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.