முன்னாள் படைவீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! – தூத்துக்குடியில் பிப்.10 குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படைவீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! – தூத்துக்குடியில் பிப்.10 குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 10.02.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை இரட்டை பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன், தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டு சமர்ப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இக்கூட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.