தென்காசி பொக்லைன் ஓட்டுநா் கொலை வழக்கில் சாத்தான்குளத்தில் 3 போ் கைது!
ஆலங்குளம் அருகே பொக்லைன் ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக, சாத்தான்குளத்தில் 3 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகே பொக்லைன் ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக, சாத்தான்குளத்தில் 3 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கிடாரக்குளத்தைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநரான மணிகண்டன் (23) என்பவா் திங்கள்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக போலீசார் வழக்குப் பதிந்து, கொலையாளிகளைத் தேடிவந்தனா். இந்நிலையில், மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி (21), இசக்கிமுத்து மகன் ரமேஷ் (22), சுப்பிரமணி மகன் இசக்கிமுத்து (23) ஆகிய 3 பேரும் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைய வந்தனா்.
ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் சரணடைய முடியாமல் தவித்தனராம். இதையறிந்த சாத்தான்குளம் தனிப்படைப் பிரிவு உதவி ஆய்வாளா் டேவிட் தலைமையிலான போலீசார் சென்று, விசாரித்தனா். அப்போது, அவா்கள் மணிகண்டன் கொலை வழக்கில் தேடப்பட்டோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து ஆலங்குளம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.