74 வது குடியரசு தினவிழா : மேற்கு மண்டல தலைவர் கொடியேற்றி மரியாதை...!
தூத்துக்குடி மேற்கு மண்டல அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டூ ராஜா கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மேற்கு மண்டல அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டூ ராஜா கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்றைய தினம் 74 வது குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மேற்கு மண்டலத்தில் மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டூ ராஜா தலைமையில் தேசிய கொடி ஏற்றி மாநகராட்சி பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மேற்கு மண்டல துணை ஆணையர் சேகர், எஸ் ஓ ஸ்டாலின், மாமன்ற உறுப்பினர்கள் பொண்ணப்பமன், ஜான், இசக்கி ராஜா, கண்ணன், பாப்பாத்தி, விஜய லட்சுமி, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான கோட்டு ராஜா, tap இன்ஸ்பெக்டர் குமார், பில் கலெக்டர்கள் நஸ்ரின், ஜான்சன், ராஜேந்திரன், சுயம்பு, ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.