நியமனத் தேர்வை விரைந்து நடத்த வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை!
நியமனத்தேர்வை விரைந்து நடத்த வேண்டும் என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நியமனத்தேர்வை விரைந்து நடத்த வேண்டும் என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனு: 2013,2017,2019, 2022 மற்றும் 2023 ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) தேர்ச்சி பெற்று அரசாணை 149 குறிப்பிட்டபடி நியமன தேர்வுக்கு தயாராகி வருகிறோம். மற்ற அனைத்து அரசு வேலைகளிலும் மதிப்பெண் அடிப்படையில் தான் பணியமர்த்தப் படுகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் PG TRB தேர்விலும் மதிப்பெண் முறையே பின்பற்றுகிறது, அதனால் அரசானை 149 விரைந்து செயல்படுத்தி நியமனத் தேர்வை நடத்த வழிவகை செய்ய வேண்டும். நியமனத் தேர்வை ரத்து செய்தால் இளைஞர்கள் ஆசிரியர் பணியினை வெறுக்கும் அபாயம் உண்டாகும். PG TRB தேர்வினை போன்று SGT மற்றும் UGTRB தேர்வினை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.