திருச்செந்தூர் - காரைக்கால் புதிய பஸ் சேவை தொடக்கம்: போக்குவரத்துக் கழகம்

திருச்செந்தூர் - காரைக்கால் புதிய பஸ் சேவை தொடக்கம்: போக்குவரத்துக் கழகம்

திருச்செந்தூரிலிருந்து காரைக்காலுக்கு ஈசிஆர் சாலை வழியாக பி.ஆர்.டி.சி சார்பில் புதிய  பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரிலிருந்து காரைக்காலுக்கு ஈசிஆர் சாலை வழியாக புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் (பி.ஆர்.டி.சி) சார்பில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இப்பேருந்து, தூத்துக்குடி, சாயல்குடி, தொண்டி, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர் வழியாக காரைக்கால் சென்றடைகிறது. திருநள்ளாறு, திருக்கடையூர் செல்பவர்களும் இபேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.