தூத்துக்குடியில் ரயில் சேவையில் பெரிய மாற்றம்! முக்கிய எக்ஸ்பிரஸ்களுக்கு புதிய ஸ்டாப்புகள்

தூத்துக்குடியில் ரயில் சேவையில் பெரிய மாற்றம்! முக்கிய எக்ஸ்பிரஸ்களுக்கு புதிய ஸ்டாப்புகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 26ஆம் தேதி முதல் முக்கிய ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்படும் பல்வேறு ரயில்களுக்கு புதிய ரயில் நிறுத்தங்களை ரயில்வே வாரியம் அனுமதித்து உள்ளது. இந்த புதிய ரயில் நிறுத்தங்களில் வருகிற 26-ந் தேதி முதல் அந்தந்த ரயில்கள் நின்றும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களிலும் பல்வேறு ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டியிலும், தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி மேலூரிலும், மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ், புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் கடம்பூரிலும், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி, தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி மேலூரிலும், பாலக்காடு-திருச்செந்தூர், திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்திலும், தூத்துக்குடி-ஓகா, ஓகா-தூத்துக்குடி இடையே விவேக் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி மேலூரிலும் நின்று செல்லும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.