தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதியில் போக்சோ வழக்குகளில் சம்பந்தபட்ட 4 குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பு: நீதிமன்றம் அதிரடி..!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதியில் போக்சோ வழக்குகளில் சம்பந்தபட்ட 4 குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பு: நீதிமன்றம் அதிரடி..!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதியில் போக்சோ வழக்குகளில் சம்பந்தபட்ட 4 குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் மற்றும் தூத்துக்குடி மகிளா நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கோவில்பட்டி மேல இலைந்தைகுளம் பகுதியை சேர்ந்த  பலவேசம் மகன் சுப்பிரமணியன் (எ) பாலசுப்பிரமணியன் (45) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஸ்டெல்லபாய் புலன் விசாரணை செய்து கடந்த 20.02.2018 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. சுவாமிநாதன் அவர்கள் நேற்று (22.04.2024) குற்றவாளியான சுப்பிரமணியன் (எ) பாலசுப்பரமணியன் என்பவருக்கு 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அதேபோல் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 10 வயது மற்றும் 8 வயது சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சாத்தான்குளம் சகாயபுரம் பகுதியை சேரந்த துரைராஜ் மகன் ஜான்ராஜ் (57) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தி புலன் விசாரணை செய்து கடந்த 27.07.2018 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. சுவாமிநாதன் அவர்கள் நேற்று (22.04.2024) குற்றவாளியான ஜான்ராஜ் என்பவருக்கு 14 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 20,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அதேபோல் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் தூத்துக்குடி சக்தி நகரை சேர்ந்த ரவி மகன் மணிகண்டன் (26) என்பவரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன் புலன் விசாரணை செய்து, அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வனிதா கடந்த 08.02.2022 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. மாதவ ராமனுஜம் அவர்கள் நேற்று (22.04.2024) குற்றவாளியான மணிகண்டன் என்பவருக்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அதேபோல் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் எட்டயபுரம் படர்ந்தபுளி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகன் (61) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. விஜயலெட்சுமி புலன் விசாரணை செய்து கடந்த 27.08.2022 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. சுவாமிநாதன் அவர்கள் இன்று (23.04.2024) குற்றவாளியான முருகன் என்பவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேற்படி வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஸ்டெல்லாபாய், அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தி (தற்போது ஓய்வு), அப்போதைய தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வனிதா, அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. விஜயலெட்சுமி, மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. முத்துகுமாரி, திருமதி. எல்லம்மாள், திருமதி. ஸ்ரீதேவி ஆகியோரையும், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் அருண் சுந்தர், முதல்நிலை பெண் காவலர் கவிதா, பெண் தலைமை காவலர்கள் லெட்சுமி, சமுத்திரகனி, சங்கீதா மற்றும் பெண் காவலர் சந்திரகலா,  ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.