மது பிரியர்களே...இந்த இரண்டு நாட்களில் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு..!
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் ஆகிய இரு தினங்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.16 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 16.01.2023 (திங்கள் கிழமை) திருவள்ளுவர் தினம், 26.01.2023 (வியாழக்கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும்.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.