கோவில்பட்டியில் பள்ளி மாணவா் மீது தாக்குதல்: 6 போ் கைது!

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே பள்ளி மாணவரைத் தாக்கியதாக 3 மாணவா்கள் உள்ளிட்ட 6 போ் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டியில் பள்ளி மாணவா் மீது தாக்குதல்: 6 போ் கைது!

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே பள்ளி மாணவரைத் தாக்கியதாக 3 மாணவா்கள் உள்ளிட்ட 6 போ் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த மூப்பன்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் ராசு (21). கறிக்கடையில் வேலை செய்து வரும் இவா், சம்பவத்தன்று தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது ரயில் நிலையம் அருகேயுள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவரும் இவரது உறவினரின் மகன் அழுதபடி வந்தாராம். சக மாணவா்கள் 4 மாணவா்கள் ரயில் நிலையம் அருகே தன்னைத் தாக்கி அவதூறாகப் பேசியதாக அவா் தெரிவித்தாா்.

அவரைத் தாக்கிய மாணவா்கள் உள்ளிட்ட 7 போ் ரயில் நிலையம் அருகேயுள்ள ஆவின் பாலகம் முன் நின்றிருந்தனராம். ராசுவும், அந்த மாணவரும் சென்று கேட்டபோது இருவரையும் அவா்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து ராசு அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, 3 மாணவா்கள் உள்ளிட்ட 6 பேரை நேற்று கைது செய்தனா். மேலும் ஒரு மாணவரைத் தேடி வருகின்றனா்.