தூத்துக்குடி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தில் இறைச்சி விற்பனை படு ஜோர்..!
திருவள்ளூர் தினத்தில் இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும் என்ற விதியை மீறி தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு அமோக விற்பனை நடைபெற்றது.
திருவள்ளுவர் தினம், மிலாடி நபி, வள்ளலார் தினம், மகாவீர் ஜெயந்தி,காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் இறைச்சிக் கடைகள் செயல் படக்கூடாது என தமிழக அரசு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் திருவள்ளுவர்தினமான இன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளிலும், பஞ்சாயத்து பகுதிகளிலும் கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிக்கடைகள் திறக்கப்பட்டிருந்தது.