அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அதிரடி நடவடிக்கை! துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கராஜா கட்சியில் இருந்து நீக்கம்..!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அதிரடி நடவடிக்கை! துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கராஜா கட்சியில் இருந்து நீக்கம்..!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் - தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், "கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு முரணான முறையில் செயல்படுவதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாலும், கட்சி ஒழுக்கத்தை மீறி கட்சிக்கு அவமானத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாலும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார்.

கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.