தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்: 1000 பேர் பங்கேற்பு..!
தேர்தல் கால வாக்குறுதியின் படி பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ சார்பில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
1 4 2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி 2010க்கு முன்னதாக பணியாற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டால் அச்சுறுத்தலில் இருந்து டெட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீறாய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், பெறும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், எம் ஆர் பி செவிலியர்கள், உள்ளிட்ட பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளது உடனடியாக வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிக் காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பனிக்காலமாக முறைப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதற்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திர பிரபு, கலை உடையார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தேசி.முருகன், துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சாம் டேனியல், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் ஜெயபாக்கியம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் ஞானராஜ், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநிலத் துணைத் தலைவர் முஜிபுர்,
தமிழக தமிழாசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் ஆதி அருமைநாயகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மூட்டா மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சிவஞானம், ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செல்லதுரை, மகாராஜன் ஆகியோர் போராட்ட கோரிக்கைகளை குறித்து பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். நிறைவாக மகாலட்சுமி நன்றி கூறினார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,