தூத்துக்குடி: தாளமுத்து நகர் அருகே திருமண விழாவில் அரிவாளுடன் ரகளை: 3பேர் கைது!!

தூத்துக்குடி: தாளமுத்து நகர் அருகே திருமண விழாவில் அரிவாளுடன் ரகளை: 3பேர் கைது!!

தூத்துக்குடியில் திருமண மண்டபத்தில் கத்தி, அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, தாளமுத்துநகர் டி.சவேரியார்புரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அரிவாளுடன் மூன்று வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டு நடனமாடியதாகவும், பின்னர் அவர்கள் சேதுபாதை ரோட்டில் வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் அருளப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று குறிப்பிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பகுதியில் 3 வாலிபர்கல் கத்தி மற்றும் அரிவாள்களுடன் சுற்றிக் கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடி முயற்சித்தனர். 

அந்த 3 பேரையும் போலீசார் மடக்கிப்டித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தாளமுத்துநகரை சேர்ந்த ஆல்பர்ட் தமிழரசன், தருண்குமார், சண்முகராஜா என்பது தெரிய வந்தது. இவர்கள் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து அந்த 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.