சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பவளப் பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!
சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பவளப் பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!
விளாத்திகுளம் அருகே சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பவளப் பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில், நேற்றிரவு மிகச்சிறிய அளவிலான, மெல்லிய உடலமைப்பு கொண்ட பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதியில் இருப்பவர்கள் வித்தியாசமாக காணப்பட்ட இந்த அரிய வகை பாம்பை பத்திரமாக பிடித்து பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் இந்த பாம்பை அடையாளம் கண்ட உயிரின ஆராய்ச்சியாளர்கள், இது இந்தியாவிலேயே மிக அரிய வகை பாம்பான "நாணல் பூச்சி பவளப்பாம்பு" என்றும், இதன் மொத்த வளர்ச்சியே இவ்வளவுதான் என்றும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மிகச் சிறிய அளவில் மெல்லிய உடல் அமைப்பு கொண்ட இந்த நாணல் பூச்சி பவள பாம்பு, நல்லபாம்புவிற்கு இருக்கும் அதே அளவு கொடூர விஷத்தன்மை கொண்டது.
இது எண்ணிக்கை அடிப்படையில் மிகக் குறைவாக உள்ள பாம்பு வகையைச் சேர்ந்ததாகவும், அதிக ஈரப்பதமான பகுதிகளில் மட்டுமே வாழக்கூடியவை என்றும் தெரிவித்தனர். பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட "நாணல் பூச்சி பவளப்பாம்பை" வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.