தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் விபத்தில் சிக்கியவர்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டை இல்லையென்றாலும் சிகிச்சை அளிக்க ஆட்சியர் உத்தரவு

தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் விபத்தில் சிக்கியவர்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டை இல்லையென்றாலும் சிகிச்சை அளிக்க ஆட்சியர் உத்தரவு

தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் விபத்தில் சிக்கியவர்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டை இல்லையென்றாலும் சிகிச்சை அளிக்க ஆட்சியர் உத்தரவு

தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை இல்லையென்றாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஜந்தாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனை வார்டு மேலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் இன்று (27.09.2023) பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே சில மாநிலங்களில்தான் காப்பீட்டு திட்டம் உள்ளது. அதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. மத்திய அரசும் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடர்பாக மாதம் இரண்டு முகாம்கள் நடத்த வேண்டும். முகாம்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளில்விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை இல்லையென்றாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பெறுவதற்கும் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.எஸ்.அகத்தியன், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் திரு.சுரேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.