தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! ₹33.43 லட்சம் பணம் பறிமுதல் – ₹11.42 லட்சம் விடுவிப்பு..!

தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! ₹33.43 லட்சம் பணம் பறிமுதல் – ₹11.42 லட்சம் விடுவிப்பு..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதைத் தடுக்கவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (21.03.2026) வரை நடைபெற்ற சோதனைகளில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ₹33,73,380 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும்,

₹20,280 மதிப்பிலான பல்வேறு பொருட்கள்

₹19,032 மதிப்பிலான மதுபானங்கள்

கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ₹11,42,100 பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், விதிமீறல் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த அதிரடி நடவடிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளதை காட்டுகிறது.