அஞ்சல் துறை சார்பில் நாளை (ஜன.25) சிறப்பு ஆதார் முகாம்

அஞ்சல் துறை சார்பில் நாளை (ஜன.25) சிறப்பு ஆதார் முகாம்

தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தில் ஆர்.சி. ஆரம்ப பள்ளியில் அஞ்சல் துறை சார்பாக ஆதார் சிறப்பு முகாம் நாளை (ஜன.25) வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆதாரில் பெயர் திருத்தம் முகவரி மாற்றம் பிறந்த தேதி மாற்றம் அலைபேசி எண்ணை இணைத்தல் கருவிழி கைரேகை மற்றும் புகைப்பட மாற்றம் முதலியவற்றை செய்து கொள்ளலாம் மேலும் புது ஆதாரும் எடுத்து தரப்படும். பெயர் திருத்தம் முகவரி மாற்றம் அலைபேசி எண்ணை இணைப்பதற்கு ரூ.50 செலுத்த வேண்டும்.

கருவிழி கைரேகை மற்றும் புகைப்பட மாற்றம் செய்ய ரூபாய் 100 செலுத்த வேண்டும். புது ஆதார் எடுப்பதற்கு இலவசம். ஐந்து வயது முதல் 7 வயது வரை கருவிழி கைரேகை மற்றும் புகைப்பட மாற்றம் இலவசம். 15 வயது முதல் 17 வயது வரை கருவிழி கைரேகை மற்றும் புகைப்பட மாற்றம் இலவசம். முகாமில் பொதுமக்கள் மாற்றத்திற்கான உரிய அசல் ஆவணங்களை கொண்டு பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.