பறக்கும் படை சோதனைகளில் ரூ.15.27லட்சம் பறிமுதல் - ஆட்சியர் தகவல்!

பறக்கும் படை சோதனைகளில் ரூ.15.27லட்சம் பறிமுதல் - ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில்  பறக்கும் படை சோதனைகளில்  இது வரை ரூ.15.27லட்சம் பறிமுதல் செய்யபட்டுள்ளது என்று தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் நடத்தைவிதிகள் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்க்கு ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும்,தொகுதி ஒன்றுக்கு 3 எண்ணிக்கையிலான பறக்கும் படைகள் வீதம் 3 சுழற்சியாக மொத்தம் 54 பறக்கும் படைகளும், அதேபோல் சட்டமன்ற தொகுதி ஒன்றுக்கு 3 எண்ணிக்கை வீதம் 3 சுழற்சியாக மொத்தம் 54 நிலையான கண்காணிப்பு குழுக்களும் இம்மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

C-Vigil செயலி மூலம் 23, கட்டணமில்லா தொலைபேசி மூலம் 14, வாட்ஸ்அப் செயலி மூலம் 5 மற்றும் இணையதளம் வாயிலாக 29 என மொத்தம் 71 புகார் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் முடிவு காணப்பட்டுள்ளன.தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இப்படைகள் செயல்பட்டு வருகிறது. 

இது தவிர ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒன்று வீதம் 6 எண்ணிக்கையிலான வீடியோ கண்காணிப்பு குழுக்களும் செயல்பட்டு வருகிறது. மேற்படி பறக்கும் படை குழுவினரால் 25.03.2024 மு.ப 6.00 மணி முதல் 26.03.2024 மு.ப 6.00 மணி வரை ரூ.5,12,500/-ம் இது வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் ரூ.19,31100/- மற்றும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மடிக்கணிணி மற்றும் பரிசுப் பொருட்கள் மதிப்பு ரூ.15,27,000/-தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள தொகை விபரம்