ஓட்டப்பிடாரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரக் கொலை: நகை, பணம் கொள்ளை!!
தூத்துக்குடி அருகே பெண்ணை கொடூரமாக கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே பெண்ணை கொடூரமாக கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமன் கிராமம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி இந்திராணி (48). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் பேச்சியப்பன் (24), கோவில்பட்டியில் உள்ள தனது தாய் மாமா கண்ணன் என்பவரின் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். கோவில்பட்டியில் ஹோட்டல்நடத்தி வரும் தம்பியின்வீட்டில் தங்கி விட்டு இந்திராணி தனது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு மேல முடிமன் கிராமத்திற்கு வந்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கீழ முடிமண் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி பிள்ளை என்பவர் இறந்துள்ளார். அவருக்கான விசேஷத்தில் இந்திராணி கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்த அவரது உறவினர்கள் கீழமுடி மண் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் மகன் சுரேஷ் (24), சாமிப் பிள்ளை மகன் வள்ளிநாயகம் (34), ஆகிய இருவரும் அவரைத் தேடி இந்திராணியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், சைடு வழியாக உள்ளே சென்று பார்த்தபோது அங்கு படுக்கை அறையில் இந்தி ராணி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மேலும் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயின், பீரோவில் வைத்திருந்த 14 பவுன் தங்க நகையும் ரூ.20ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
யாரோ கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து இந்து ராணியை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளை அடித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள் பின்னர் இந்திராணி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பல நாட்கள் நோட்டமிட்ட கொள்ளை கும்பல் இந்திராணியை பின் தொடர்ந்து வந்து இந்த கொலையை செய்து விட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.