உடன்குடியில் 4 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமையில் கொலை – தாயின் கள்ளக்காதலன் கைது

உடன்குடியில் 4 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமையில் கொலை – தாயின் கள்ளக்காதலன் கைது

உடன்குடியில் 4 வயது பெண் குழந்தை மர்மசாவு வழக்கில் திருப்பமாக பாலியல் வன்கொடுமையில் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தாயின் கள்ளக்காதலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜ் (20), தொழிலாளி. இவருக்கும், குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி குலசேகரன்பட்டினம் சென்று வந்தார்.

அப்போது, அந்த பெண் இருக்கும் பகுதியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் தனது 4 வயது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த பெண்ணுடன் இசக்கிராஜிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் தனது குழந்தையுடன் உடன்குடி செட்டியாபத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார். 

அங்கு இசக்கிராஜ் அடிக்கடி வந்து சென்றார். நேற்று முன்தினம் குழந்தைக்கு திடீரென்று உடல் நலம் சரிஇல்லாமல் போனது. இசக்கிராஜ், இளம்பெண்ணும் குழந்தையை உடன்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ெதாடர்ந்து இசக்கிராஜ், குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் குழந்ைத பாலியல் வன்கொடுமை செய்ததில் இறந்ததும், அதனால் உடலில் காயங்கள் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இசக்கிராைஜ பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, நேற்று முன்தினம் இளம்பெண் வீட்டிற்கு இசக்கிராஜ் சென்றார். அங்கு குழந்தையின் தாய் இல்லை. குழந்தை மட்டும் தனியாக இருந்தது. இசக்கிராஜ், அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறிய குழந்தை பரிதாபமாக இறந்தது. உடலிலும் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டது.

அப்போது, அங்கு குழந்தையின் தாயார் வந்தார். குழந்தை மயங்கிவிட்டதாக கூறி 2 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மர்மசாவு வழக்கை கொலை வழக்கமாக மாற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உடன்குடியில் 4 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.