அவதூறு பரப்பும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை: டி.எஸ்.பி.யிடம் புகார்!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் குறித்து அவதூறு பரப்பும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள மனு: கடந்த 11ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் தனலட்சுமி, நான்சி, சந்தனராஜ், சம்சு மற்றும் 10 பேர் கூட்டாக சேர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில், அவதூறான பரப்புரை செய்துள்ளார்கள். 

2018ஆம் ஆண்டு நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றுக் கொண்டுதான் ஆலைக்கு எதிராக போராடினார்கள் என்றும், பேராசிரியர் பாத்திமா பாபு வீராங்கனை அமைப்பின் மூலம் பணம் பெற்று போராட்டம் நடத்தினார் என்றும் இந்தப் போராட்டத்திற்கு அவர் வெளிநாட்டில் இருந்து கையூட்டு பெற்றார் என்றும் ஒரு தனி நபரின் பெயரை களங்கப்படுத்தும் விதமாக அவதூறாக பேசி பேட்டி கொடுத்துள்ளார்கள். 

பேராசிரியர் பாத்திமா பாபு அவர்களுக்கு சமூகத்தில் இருக்கும் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக இந்தப் பேட்டி உள்ளது. இந்த செயல், அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இப்படி அபாண்டமான, ஆதாரமற்ற பரப்புரைகளை செய்துவரும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.