மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் ஆட்சியர் அஞ்சலி!
தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு சார்பில் ஆட்சியர் அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சேர்ந்த வேல்குமார் என்பவர் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டு அன்னாரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் விதமாக இன்று (07.01.2025) மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.