அமாவாசையில் அன்னதானம் செய்வது ஏன் தெரியுமா..? இது தெரிஞ்சா நீங்களும் கண்டிப்பாக இனி அன்னதானம் செய்வீங்க!
சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் இணைவதை அமாவாசை என்கிறோம். இந்த அமாவாசை தினத்தில் பித்ரு காரியங்களும், குலதெய்வ வழிபாடும் செய்வது மரபாக இருந்து வருகிறது. மேலும் அமாவாசை தினத்தில்....
சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் இணைவதை அமாவாசை என்கிறோம். இந்த அமாவாசை தினத்தில் பித்ரு காரியங்களும், குலதெய்வ வழிபாடும் செய்வது மரபாக இருந்து வருகிறது. மேலும் அமாவாசை தினத்தில் அன்னதானங்கள் மேற்கொள்வதும் உண்டு. அமாவாசையில் அன்னதானங்கள் செய்வது எந்த அளவிற்கு பலன்களை தரும்? என்பது தெரிந்தால் கண்டிப்பாக நாமும் யாருக்காவது அன்னதானம் செய்து விடுவோம்.
நம் முன்னோர்கள் பிதுர் தேவதைகளாக வணங்கப்படுகின்றனர். இவர்கள் பூமிக்கு வரக்கூடிய அமாவாசை தினம், மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கும் நல்ல காரியங்கள் யாவும் தடை இல்லாத வெற்றி பெறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இன்றைய நாளில் சுப காரியங்கள் மேற்கொள்ளப்படாது ஆனால் துவங்கும் எந்த ஒரு காரியமும் இந்நாளில் நற்பலன்களை தரும் என்பதால் அமாவாசை அசுப நாள் கிடையாது.
அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் இணைவதால் பூமியில் காந்த சக்தி ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் அதிகரிப்பதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனர் எனவே இந்த நாளில் அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்க்கின்றனர். மேலும் இந்நாளில் முன்னோர்கள் ஆகிய பிதுர் தேவதைகள் மிகுந்த பசியுடன் இருப்பார்கள். அவரவர் சொந்த வீட்டிற்கு சென்று நமக்கு பிதுர் காரியங்களை செய்கின்றனரா? பசியாறலாமா? என்று பார்த்துக் கொண்டிருப்பார்களாம்.
அப்படி எதுவும் செய்யாத பட்சத்தில் ஆத்மாக்கள், மரம், செடி, கொடிகளில் அமர்ந்து அவற்றின் சாரத்தை உட்கொள்ளுமாம். இதனால் தான் அமாவாசை தினங்களில் மரம், செடி, கொடிகளில் இருந்து எதையும் பறிக்கக் கூடாது. அவற்றை தொடாமல் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பொதுவாக ஆத்மாக்கள் சந்திரனுடைய ஒளிக்கற்றையை உண்டு வாழ்பவையாக இருக்கின்றன. அமாவாசையில் சந்திரனுடைய ஒளிக்கற்றை இல்லாததால் அதிக பசியுடன் அலைந்து கொண்டிருக்கும். தர்ப்பணம் செய்து பசியாற்றுவது மட்டுமல்லாமல், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதும், ஜீவராசிகளுக்கு அன்றைய தினத்தில் அன்னதானம் செய்வதும் கூட நமக்கு சிறந்த பலன்களை அளிக்க கூடியதாக இருக்கிறது. இது ஏழேழு பிறவிக்கும் தொடரும் என்றும் நம்பப்படுகிறது.
நமக்கு அன்னத்தை அளிப்பவள் அன்னபூரணி ஆனால் ஆத்மாக்களுக்கு அன்னத்தை கொடுப்பவள் ஸ்வதா தேவி என்பவள் ஆவாள். பிதுர்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணங்களையும், யாகத்தில் போடப்படும் பொருட்களையும் உரிய ஆத்மாக்களிடம் சேர்ப்பது இவளின் வேலையாக இருக்கிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மாசி அமாவாசை ஆகிய நான்கு அமாவாசைகள் ஒரு வருடத்தில் முக்கிய அமாவாசையாக கொண்டாடப்படுகிறது. தை அமாவாசையில் பிதுர் கடன்கள் செய்ய முடியாவிட்டால், புரட்டாசி மாத அமாவாசையில் அதை செய்து புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம். 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த பலன் புரட்டாசி அமாவாசையில் செய்வதால் கிடைக்கப் பெறுகிறது. மேலும் நம்மை பிடித்த தோஷங்கள் யாவும் அன்றைய நாளில் விலகுகிறது.
ஒவ்வொரு அமாவாசையிலும் ஏழை குழந்தைகள், ஆதரவற்றோர்கள், பசியால் வாடுபவர்கள், வீடு வாசல் இல்லாதவர்கள் ஆகியோர்களுக்கு வயிறார அன்னதானம் செய்ய வேண்டும். மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் காகம், பசு, பூனை, நாய் ஆகிய ஜீவராசிகளுக்கும் அன்னத்தை ஈட்டு நாம் செய்த பாவங்களை போக்கிக் கொள்ளலாம். இன்றைய நாளில் எதுவுமே செய்ய முடியாதவர்கள் ஒன்பது வாழை பழங்களை பசுக்களுக்கு தானம் செய்யலாம். அமாவாசையில் அசைவ உணவுகளை தவிர்த்து, பசியால் வாடும் ஆத்மாக்களுக்கும், பசியால் வாடும் உயிருள்ள ஜீவராசிகளுக்கும் உணவு கொடுப்பது என்பது தவறாமல் செய்ய வேண்டிய புண்ணிய காரியம் ஆகும்.
+++++++++++++++++++++++++++++++
தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் செய்திகள் முதல் உலகம் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News, Thoothukudi news,), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் டூட்டி விஷன் நியூஸ் (www.tutyvision.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Whatsapp Group: Click Here...