கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1.16 லட்சம் ரொக்கப்பணம் சிக்கியது.

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார்  நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத  ரூ.1.16 லட்சம் ரொக்கப்பணம் சிக்கியது.

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிரடி சோதனை‌ அலுவலர்கள் முதல் இடைத்தரகர்கள் வரை விசாரணை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்  விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கிடைத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர் அனிதா உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சில லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைலி மற்றும் காக்கிச்சட்டை அணிந்து டிரைவர் போல் மாறுவேடத்தில் வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் திடீர் சோதனையின் காரணமாக  வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மெயின் கேட் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பல்வேறு பணிகள் நிமித்தம் வருகை தந்த பொதுமக்கள் திரும்பி சென்றனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத்  மற்றும் அலுவலக ஊழியர்களிடம் பூட்டப்பட்ட அறையில் விசாரணை நடைபெற்றது. 

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் உள்ளே இருந்த புரோக்கர்கள் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் ஆம்னி பேருந்து மற்றும் மினி பேருந்துகளின் உரிமையாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அவர்களிடம் இருந்த மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.

மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். 

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார்  நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத  ரூ.1.16 லட்சம் ரொக்கப்பணம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

--------------------------------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :-

WHATSAPP GROUP LINK 2 :-

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :-