தூத்துக்குடியில் வாலிபர் சங்கம் சார்பில் பிபிசி ஆவணப்படம் திரையிடல்!
தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பிபிசி நிறுவனம் வெளியிட்ட மோடியின் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பிபிசி நிறுவனம் வெளியிட்ட மோடியின் ஆவணப்படம் திரையிடப்பட்டது.
BBC செய்தி நிறுவனம் 2002 குஜராத் கலவரம் தொடர்பாக ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ள INDIA: THE MODI QUESTION என்கின்ற ஆவணப்படத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் தூத்துக்குடி பி.ராமமூர்த்தி நினைவகத்தில் வைத்து திரையிடப்பட்டது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிபிசி நிறுவனம் பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த ஆவணப் படங்களை திரையிட்டு காண்பித்து வருகின்றனர்
தூத்துக்குடியில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி குறித்த ஆவண படத்தை திரையிட்டனர் இதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பார்த்தனர்.
செய்தியை வீடியோ மற்றும் ஆடியோவாக அறிந்து கொள்ள ...