அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்- அமைச்சர் கீதாஜீவன் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக நல்ல முடிவு எட்டப்படும் என மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதையடுத்து அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கபட்டது.

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்- அமைச்சர் கீதாஜீவன் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக நல்ல முடிவு எட்டப்படும் என மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதையடுத்து அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கபட்டது.

10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையங்களாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை பிரதான மையங்களோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும். 2 அல்லது மூன்று 3 மையங்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி வேலை பளுவை அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்றதி. செவ்வாய்கிழமை அன்று மாலை முதல் மாவாட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருபு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் இரவு முழுவதும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் த.ஜெயராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.சந்திரா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர் இல.ராமமூர்த்தி, ரவிதாகூர் ஆகியோர் பேசினர்.

போராட்டத்தை தொடர்ந்து புதன்கிழமையன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் டூவிபுரத்தில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் உதவியாளர்கள் சங்கம் மாநில தலைவர் ரத்னா மாலா, மாநில பொதுச் செயலாளர் டெய்சி, மாநில பொருளாளர் தேவமனி, மாநில துணைத் தலைவர் ஹேமப்பிரியா, சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்ணன், மாநில செயலாளர் ஆர்.ரசல், சிபிஎம் மாநகர் செயலாளர் தா.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில்: அங்கன்வாடி பணியாளர்கள் தங்களுக்கு கோடை விடுமுறை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய கோரிக்கையை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. விரைவில் இதற்கான நல்ல முடிவு கிடைக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களை வறுத்தி கொண்டு நடத்தும் போராட்டத்தை கைவிட வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்,மேலும் அவர்கள்

போராட்டத்தை வாபஸ் பெற ஒத்துக்கொண்டதாகவும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.