காது மற்றும் பேச்சு குறைபாடுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மார்ச் 9, 10 ல் இலவச பரிசோதனை முகாம்: ஆட்சியர் தகவல்!

காது மற்றும் பேச்சு குறைபாடுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மார்ச் 9, 10 ல் இலவச பரிசோதனை முகாம்: ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மற்றும் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் காது மற்றும் பேச்சு குறைபாடுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச பரிசோதனை முகாம் 09.03.2024 மற்றும் 10.03.2024 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது  என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை MERF அறக்கட்டளை இணைந்து தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மற்றும் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் காது மற்றும் பேச்சு குறைபாடுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் காது கேட்பதில் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து இலவசமாக காதொலி கருவிகள் வழங்கப்படுவதுடன் குறைபாட்டின் தன்மையின் அடிப்படையில் காக்கிளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சையும் இலவசமாக செய்யப்படும்.

இம்முகாம் 09.03.2024 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலை அரங்கத்திலும், 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லுரியிலும் வைத்து காலை 10.00 மணியிலிருந்து 01.00 மணி வரை நடைபெறும். இம்முகாமிற்கு செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், தங்கள் ஆதார் கார்டு, பாஸ்போட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்கோ.லட்சுமிபதி,  அவர்கள் தெரிவித்துள்ளார்.