தூத்துக்குடியில் சப் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி: 2 ரவுடிகள் கைது!

தூத்துக்குடியில் சப் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொலை செய்ய முயன்றதாக 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் சப் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி: 2 ரவுடிகள் கைது!

தூத்துக்குடியில் சப் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொலை செய்ய முயன்றதாக 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாதா கோவில் தெருவில் சேர்ந்தவர் யோகதுரை மகன் சந்தனராஜ் என்ற சண்டல் (42). தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ் மகன் செல்வம் (45). இவர்கள் இருவர் மீதும் கொலை மற்றும் வழிப்பறி உள்பட பல வழக்குகள் உள்ளது. நேற்று இரவு இருவரும் சந்தன்ராஜ் வீட்டில் இருப்பதாக தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் வீட்டுக்கு சென்றனர்.  அங்கு இருவரும் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றார்களாம். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன் 2 பேரையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் கொலை  முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.