கல்வி கட்டணத்தை பன்மடங்காக‌ உயர்த்திய தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்..!

கல்வி கட்டணத்தை பன்மடங்காக‌ உயர்த்திய தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்..!

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் கல்வி கட்டணத்தை பன்மடங்காக‌ உயர்த்திய நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து 3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளது, அதேபோல் அலுமினி கட்டணம் எனக்கூறி முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் வரை அனைவரிடமும் 5 ஆயிரம் கட்டணம் செலுத்த கூறியுள்ளனர்,எனவே   இக்கட்டண உயர்வு என்பது பெரும்பாலான ஏழை எளிய மாணவர்களுக்கும் அருணை பெற்றோர்களுக்கும் பெரும் சுமையாகவே அமைந்துள்ளது, எனவே மாணவர்களிடத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத போது இடைநீற்றலுக்கு ஆளாகும் சூழல் உள்ளது எனவே உயர்த்தப்பட்ட கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், அலுமினி தொகை வசூல் செய்வதை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் வ.உ.சி கல்லூரி கிளை சார்பில் தலைவர் மாடசாமி தலைமையில் புதன்கிழமை 3 வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போரட்டம் நடைபெற்றது.

இதில் சங்க செயலாளர்  கிஷோர் குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சங்கத்தின் மாநில செயலாளர் கோ.அரவிந்தசாமி, மாநில துணைத் தலைவர் தே.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

---------------------------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE

WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :- CLICK HERE