“குலசேகரன்பட்டினத்தில் 2½ வயது சிறுவன் கடத்தல் முயற்சி – 30 நிமிடத்தில் போலீஸ் அதிரடி மீட்பு!”

“குலசேகரன்பட்டினத்தில் 2½ வயது சிறுவன் கடத்தல் முயற்சி – 30 நிமிடத்தில் போலீஸ் அதிரடி மீட்பு!”

குலசேகரன்பட்டினத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2½ வயது சிறுவனை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற தம்பதியை, காவல்துறையினர் 30 நிமிடங்களுக்குள் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். சிறுவன் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

கீழமலையன் தெருவில் உள்ள பெட்டிக்கடை அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை, அங்கு வந்த தம்பதியினர் பேச்சு கொடுத்து திடீரென வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பினர். இதைக் கண்ட சிறுவனின் தாய் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

தகவல் கிடைத்தவுடன் சார்பு ஆய்வாளர் ரேணுகா தலைமையில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். குலசேகரன்பட்டினம் – திருச்செந்தூர் சாலையில் கோவில் அருகே தம்பதியை 30 நிமிடங்களிலேயே பிடித்து சிறுவனை மீட்டனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த லிங்கதுரை (35) மற்றும் ஜெயந்தி (33) என தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை துரிதமாக மீட்ட காவல்துறையினரை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் சி. மதன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.