கயத்தாறு அருகே ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை!!
கயத்தாறு அருகே குடும்ப பிரச்சினையில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு அருகே குடும்ப பிரச்சினையில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு அருகே உள்ள சன்னதுபுதுக்குடி மேலத்தெருவில் வசித்து வருபவர் மாடசாமி. முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவரது மகன் ஜெயக்குமார் (வயது 31). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த நித்தியா( 29) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மாலினி, செல்வராணி ஆகிய 2 மகள்களும், மகிழ்நன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் வழக்கம் போல் கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியநிலையில் ஜெயக்குமார் பெட்ரூமிற்குள் சென்று கதவை அடைத்து கொண்டாராம். நீண்டநேரம் மனைவி கதவைதட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து கதவை உடைத்து உள்ளே ெசன்று பார்த்துள்ளனர். அங்கு ஜெயக்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை பார்த்து மனைவியும், உறவினர்களும் கதறிதுடித்தனர்.
தகவல் அறிந்த கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் சம்பவ வீட்டிற்கு சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த ஜெயக்குமார் உடலை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.