தூத்துக்குடியில் 200 கோடி மதிப்பீட்டில் 6 வழிச்சாலை: மத்திய அரசு அறிவிப்பு!

தூத்துக்குடியில் 200 கோடி மதிப்பீட்டில் 6 வழிச்சாலை: மத்திய அரசு அறிவிப்பு!

தூத்துக்குடியில் 200 கோடி மதிப்பீட்டில் 6 வழிச்சாலை: மத்திய அரசு அறிவிப்பு!

தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் 6 வழிச்சாலை அமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தூத்துக்குடி துறைமுகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில்  பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய துறைமுகமாக செயல்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்திற்கு பறக்கும் சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் மேம்பாட்டு பணிகள் பெரிய அளவில் செய்யப்படாமல் இருந்து வந்தது. 

இதையடுத்து தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய அரசிடம்  தூத்துக்குடி துறைமுகம் மேம்பாடு குறித்து பல்வேறு காலகட்டங்களில் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகம் சாலை பணிகளுக்காக 200 கோடி மத்திய அரசு நேற்று ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், "தூத்துக்குடியில்  போக்குவரத்தை மேம்படுத்த, தூத்துக்குடி துறைமுக பகுதியில் 5.16 கி.மீ. நீளமுள்ள 6 வழிச்சாலை அமைக்க, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என அமைச்சர் நிதின் கட்கரி பதிவிட்டுள்ளார்.அமைச்சரின் இந்த அறிவிப்பு  தூத்துக்குடி உள்ளிட்ட  தென் மாவட்ட பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

https://twitter.com/nitin_gadkari/status/1639862515004854274?s=20