வங்கி ஊழியர்களின் 4000 கி.மீ வேன் பிரச்சாரம் தூத்துக்குடியில் துவங்கியது!

“வங்கிகளை காப்போம் தேசத்தை காப்போம்” என்ற முழக்கத்துடன் வங்கி ஊழியர்களின் 4 நாட்கள் 4000 கி.மீ. வேன் பிரச்சாரம் தூத்துக்குடி சுகம் ஹோட்டம் முன்பு துவங்கியது.

வங்கி ஊழியர்களின் 4000 கி.மீ வேன் பிரச்சாரம் தூத்துக்குடியில் துவங்கியது!
வங்கி ஊழியர்களின் 4000 கி.மீ வேன் பிரச்சாரம் தூத்துக்குடியில் துவங்கியது!

“வங்கிகளை காப்போம் தேசத்தை காப்போம்” என்ற முழக்கத்துடன் வங்கி ஊழியர்களின் 4 நாட்கள் 4000 கி.மீ. வேன் பிரச்சாரம் தூத்துக்குடி சுகம் ஹோட்டம் முன்பு துவங்கியது.

“வங்கிகளை காப்போம் தேசத்தை காப்போம்” என்ற முழக்கத்துடன் வங்கி ஊழியர்களின் ஜூலை 19 முதல் 22 வரை தமிழ கத்தில் 4 முனைகளிலிருந்து 4 நாட்கள் 4000 கி.மீ. வேன் பிரச்சாரம் நடைபெறுகிறது.  

“பொதுத்துறை வங்கிகளை தனியார்மய மாக்கப் போகிறோம்” என்று மீண்டும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பாஜக அரசின் 9 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அறிவித்துள்ளார். இதனால் வங்கிகள் தனியார் மய ஆபத்து மீண்டும் தலை தூக்கி உள்ளது.  அதே போல் சாமானிய மக்களுக்கு சேவை புரியும் கூட்டுறவு வங்கிகளை தனியார்மய மாக்கவும், அவற்றை மாநில அரசுகளிடமிருந்து பறித்து, ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ள வுமான முயற்சி நடைபெறுகிறது. கிராம வங்கிகள் மொத்தக் கடனில் 90 சதவீத கடனை கிராமப்புற ஏழை மக்களுக்கு வழங்கி வருகின்றன. அந்த வங்கிகளின் 49 சதவீதப் பங்கு களை தனியாருக்கு விற்பதற்கான முயற்சி நடைபெறுகிறது. அது நடைபெற்றால் “ஏழை மக்களுக் கான சேவை” என்ற, கிராம வங்கிகள் உருவாக் கப்பட்டதன் நோக்கம் சிதைக்கப்பட்டுவிடும்.   

வங்கிகள் தனியார்மயத்தை எதிர்த்து நாடெங்கிலும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர் கள் அதிகாரிகள் 2021 மார்ச் 15, 16 மற்றும் டிசம்பர் 16, 17 ஆகிய நான்கு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் இந்த ஆபத்து தற்காலிகமாக தள்ளி போடப்பட்டது. ஆனால், ஒன்றிய நிதி அமைச்சரின் சமீப அறிவிப்பால் அந்த ஆபத்து மீண்டும் தலை தூக்கியுள்ளது. அரசு வங்கிகள் திட்டமிட்டே முடக்கப்படு கின்றன. 5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப் படாமல் விடப்பட்டுள்ளன. கடுமையான ஊழி யர் பற்றாக் குறையால் வாடிக்கையாளர் சேவை மிகவும் பாதிப்படைகிறது. கடை நிலை ஊழியர் கள், ஆயுதமேந்திய காவலர்கள் தற்காலிக ஊழியர்களாகவும் லட்சக்கணக்கான வணிக முகவர்கள் ஒப்பந்த முறையிலும் நியமிக்கப் பட்டு அவர்கள் கடுமையான உழைப்புச் சுரண்ட லுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எஸ்.எம்.எஸ் கட்டணம், ஏடிஎம் கட்டணம், பணம் செலுத்தும் கட்டணம்,  பாஸ்புக் கட்டணம், குறைந்த பட்ச இருப்புக் கட்டணம் என்று பல வகையில் வாடிக்கையாளர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

மறுபுறம் பெரு முத லாளிகளின் வராக்கடன்கள் ரத்து செய்யப் படுகின்றன. வேண்டுமென்றே கடனை திருப்பிக் கட்டாதவர்களிடமும், மோசடிப் பேர்வழிகளிட மும் சமரச ஒப்பந்தம் போட்டு அவர்களை காப் பாற்றும் முயற்சியில் ரிசர்வ் வங்கியே முனைப்பு காட்டுகிறது. எனவே, இவற்றையெல்லாம் அம் பலப்படுத்தியும், பொதுத்துறை, கூட்டுறவு, கிராம வங்கிகளை பாதுகாக்கவும், வலியுறுத்தி தமிழ் நாடு முழுவதும் சென்னை, ஓசூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய மையங்களிலிருந்து ஜூலை 19 அன்று துவங்கி திருச்சியில் ஜூலை 22 அன்று பொதுக்கூட்டத்துடன் வங்கி ஊழியர்களின் பிரச்சாரப் பயணம் நிறைவடைய உள்ளது. 

ஜூலை 19 அன்று காலை தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று இடங்களில் பிரச்சார பயணம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சுகம் ஹோட்டல் முன்பு நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ரசல் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தங்க மாரியப்பன் பிரச்சார உரையாற்றினார்.

பீச் ரோட்டில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி துறைமுகம் லேபர் டிரஸ்டி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலாளர் சீனிவாசன், பாரத் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க துணை பொதுச் செயலாளர் கார்த்திகேயன், இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சங்கத்தின் மூத்த தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிபிஇஎப் மாவட்ட தலைவர் காளிமுத்து, மாவட்ட செயலாளர் ஜெயநிக்சன் ஆகியோர் பிரச்சார உரையாற்றினார்.

தூத்துக்குடி வ உ சி கல்லூரி முன்பு துவங்கிய பிரச்சார பயணத்தினை வணக்கத்திற்குரிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்கத் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார். இந்திய ஜனநாயகம் வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் சுரேஷ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அனைத்து கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க மாநில தலைவர் அண்டோ கால்பெட் பிரச்சார உரையாற்றினார்.