தூத்துக்குடி மாநகரில் 12 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!

தூத்துக்குடி மாநகரில் 12 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!
தூத்துக்குடி மாநகரில் 12 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!

தூத்துக்குடி மாநகரில் 12 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாகவே வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் தளபதியார் விஜய் ஆனைக்கிணங்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் வழிகாட்டுதலின்படி கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் தமிழக முழுவதும் திறக்கப்பட்டு பொதுமக்களின் தாகத்தை தீர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி வஉசி கல்லூரி, அண்ணா பேருந்து நிலையம், பழைய மாநகராட்சி உள்ளிட்ட மாநகரின் பகுதிகளில் 12 இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஜே. சுமன் தலைமையில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், தூத்துக்குடி மாவட்ட மீனவர் அணி செயலாளர் ஜாக்சன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முதல் நாளான இன்று தண்ணீர் மட்டுமல்லாமல் தர்பூசணி பழம் மற்றும் மோர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் தண்ணீர் பந்தலில் நீரின்றி அமையாது உலகெனின் யார்யாருக்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு என்ற திருவள்ளுவரின் திருக்குறள் இடம் பெற்றிருந்தது.