திருவிழாவுக்கு வந்த முதியவர் திடீர் மரணம் : மேயரின் மனிதநேய உதவிக்கு நரிக்குறவர்கள் நன்றி!

தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலயம் அருகே இறந்து கிடந்த முதியவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மேயர் நடவடிக்கை மேற்கொண்டார்.

திருவிழாவுக்கு வந்த முதியவர் திடீர் மரணம் : மேயரின் மனிதநேய உதவிக்கு நரிக்குறவர்கள் நன்றி!

தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலயம் அருகே இறந்து கிடந்த முதியவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மேயர் நடவடிக்கை மேற்கொண்டார். 

தூத்துக்குடியில் பணிமய மாதா பேராலய திருவிழா நடைபெற்று வருகிறது இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் ஊசி பாசி விற்று பிழைப்பை நடத்துவதற்காக நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து வயதான 80 வயதான நரிக்குறவர் செல்லப்பா மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாதா கோவில் அருகே உள்ள ஜார்ஜ் ரோடு பகுதியில் சாலை ஓரத்தில் இருந்து ஊசி மணி, பாசி விற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் சாலையில் இருந்ததால் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் வெயில் அதிகமாக இருந்ததன் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்ட இன்று காலை நரிக்குறவர் செல்லப்பா சாலையிலேயே பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து அவரது  உடலை சொந்த ஊரான நெல்லை மாவட்டம் வள்ளியூர் கொண்டு செல்ல பணம் இல்லாத காரணத்தினால் சாலை ஓரத்தில் கடந்த 4 மணி நேரமாக அவரது உடல் இருந்தது. அவரது வயதான மனைவி இந்திராவும்  தனது கணவர் உடலை வள்ளியூர் கொண்டு செல்ல உதவும் படி பார்ப்பவர்களிடம் கூறி வருவது மனதை நெகிழ வைத்து வருகிறது.

இந்த சம்பவத்தை உடனடியாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக வேறு யாரிடமும் கேட்க வேண்டாம் தனது சொந்த செலவில் வாகனத்தை அனுப்பி வைப்பதாக கூறியதோடு உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை அனுப்பி வைத்து செல்லப்பாவின் உடலை சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்.

உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வசதி இல்லாத நேரத்தில் உதவி செய்த மேயருக்கு நரிக்குறவர் மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மேயரின் இந்த மனிதாபிமான  செயலை நரிக்குறவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.