தூத்துக்குடியில் பைக் கவிழ்ந்து இளைஞா் பலி..!

தூத்துக்குடியில் பைக் கவிழ்ந்து இளைஞா் பலி..!

தூத்துக்குடியில் கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி ஜாா்ஜ் சாலை காந்தி நகரை சோ்ந்த அந்தோணிதாஸ் மகன் ரூபன்(23). தனியாா் நிறுவன ஊழியரான இவா் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டாா் பைக்கில் துறைமுகம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் பலத்த காயமடைந்த ரூபன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தாா். இது குறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.