தூத்துக்குடி மாவட்டத்தில் 120 கிராம பஞ்சாயத்துக்களில் ஜன.19ல் வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19ம் தேதி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயம் சார்ந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 120 கிராம பஞ்சாயத்துக்களில் 2022-23 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இக்கிராமங்களில் 19.01.2023 வியாழக்கிழமை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாயிகள் பயனடையும் பொருட்டு, பல்வேறு விவசாயம் சார்ந்த துறைகள் ஒருங்கிணைந்து, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாமில் குளத்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பம் பெறுதல், பயிர் கடன் வழங்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பம் பெறுதல், பயிர் காப்பீடு குறித்து விளக்குதல், கால்நடைகள் நலம் பேண சிறப்பு முகாம் நடத்துதல் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்களில், பயனாளிகள் தேர்வு செய்தல் என பல்வேறு விவசாய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இக்கிராம விவசாயிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கேட்டுக்கொள்கிறார்.