தூத்துக்குடி ஸ்டெம் பார்க் பகுதியில் குளம் அமைக்கும் பணி : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டெம் பார்க் பகுதியில் குளம் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் பொழுதுபோக்கும் விதமாகவும் மாநகரை சீராக்கும் வண்ணமாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி ஸ்டெம் பார்க் பகுதியில் பொதுமக்கள் அமர்ந்து இயற்கை ரசிக்கும் வண்ணமாக குளம் அமைக்கும் பணியானது மாநகராட்சியால் நடைபெற்று வருகின்றது.
இதன் மூலம் அந்த இடத்தில் மாநகர மக்கள் குளத்தை சுற்றியபடி அமர்ந்தும் நடந்தும் வர முடியும் என்றும் பறவைகள் நீர் அருந்துவதற்கான அமைப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றது தற்போது நடைபெற்ற வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்று தெரிவித்தார். ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் குமார், ரெங்கசாமி, தெய்வேந்திரன், நாகேஸ்வரி, போல்பேட்டை பகுதி தொண்டரணி துணை அமைப்பாளர் அன்பரசன் உட்பட பலர் உடனிருந்தனர்