ஓட்டப்பிடாரம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் - சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்!
ஓட்டப்பிடாரம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் - சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குலசேகர நல்லூர் கிராமத்தில் ஸ்ரீ சுடலை மாடசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு பெரிய மாடு, சின்ன மாடு ,மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில் பெரிய மாட்டு வண்டி போட்டியில் 9 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி போட்டியில் 21மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை அரவன்பட்டி தொழில் அதிபர் முருகேச பாண்டியன். மற்றும் ஒட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தொடங்கி துவக்கி வைத்தார்.
10 மைல் தூரம் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை கடம்பூர் இளைய ஜமீன்தார் கருணாராஜா, மாட்டு வண்டியும், 2-வது பரிசை மேட்டூர் அழகர் பெருமாள்,மாட்டு வண்டியும், 3-வது குலசேகர நல்லூர் வேலுச்சாமி ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் மாட்டு வண்டியும், 4 பரிசு கச்சேரி தளவாய்புரம் ஈஸ்வரன் மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 6-மைல் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் சீவலப்பேரி சுப்பையா பாண்டியன் நினைவாக துர்காம்பிகை மாட்டுவண்டி முதலிடத்தையும், 2-வது இடத்தை திருச்செந்தூர் உதயம் துரைப்பாண்டியன் மாட்டு வண்டியும், 3-வது இடத்தை சிந்தலக்கட்டை ராஜேஷ் வண்டியும் 4வது சக்கம்மாள்புரம் கமலா பிடித்தன.
பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கண்டு ரசித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி மட்டு வண்டி உரிமையாளர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது...