தூத்துக்குடியில் வெள்ளம் தடுப்பு தூர்வாரும் பணி : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!!

தூத்துக்குடி மாநகர பகுதியில் காற்றாட்டு வெள்ளம் தடுப்பு தூர்வாரும் பணி அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி கடந்த சில ஆண்டுகளாக பெய்த கனமழையால் கழுகுமலை கயத்தாறு, உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து காற்றாட்டு வெள்ளம் சாலை காடுகள் வழியாக மாநகர பகுதிக்குள் வந்த மழைநீரால் பொதுமக்கள் உள்பட பல தரப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பு இந்த ஆண்டு இல்லாத நிலை இருக்க வேண்டும் என்று மாநகர பகுதிக்குள் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை முறைப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மடத்தூர் இரயில்வே தண்டவாளம் வழியாக பக்கிள்ஓடையில் வந்து இணையும் வழித்தடமான பசும்பொன்நகர், முத்துநகர் ஆசீர்வாத நகர் பாலையாபுரம் ஆகிய பகுதிகளில் கரையை பலப்படுத்தி தேவையற்ற கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணியை என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் சமுதாய பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் மேற்கொள்வதை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர் வாரும் பணியை துவக்கி வைத்து நல்ல முறையில் முறையாக தண்ணீர் வழிந்தோடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் முதன்மை செயல் அதிகாரி ஆனந்த ராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 2025 2026 மேம்பாட்டு நிதியிலிருந்து மீன்வளக்கல்லூரி செல்லும் புதிய பாலம் 14.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டதையும் திறந்து வைத்தார். மீன்வளக்கல்லூரி முதல்வர் பொறுப்பு ஆதித்தன், மாநகராட்சி இளநிலை பொறியாளர் செல்வம், மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.