தூத்துக்குடியில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை கண்டித்து சிஐடியு வினர் ஆா்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை கண்டித்து சிஐடியு வினர் ஆா்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பு அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்க சி ஐ டி யு பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டம் கடந்த  சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறிய தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஓப் பந்தம் கடந்த 2023 ஆம் ஆண்டுடன் முடிவடைந்துள்ளது , எனவே உரிய ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான 150 மாத கால பண பலன்களை வழங்க வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

தமிழக அரசு இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் வருகிற 24-ஆம் தேதி தமிழக முழுவதும் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர் .

இதற்கு SETC பணிமனை செயலாளா் மாயக்குமாா் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளா் பேச்சிமுத்து, நிர்வாகி ரவிதாகூர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைச் செயலாளா் பிச்சைமணி நன்றியுரையாற்றினாா். இதில், போக்குவரத்து கழக தொழிலாளா்கள், ஓய்வுதியர்கள் திரளாக கலந்து கொண்டு கோஷங்களை வலியுறுத்தி முழக்கமிட்டனர். 

-----------------------------------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :-

WHATSAPP GROUP LINK 2 :-

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :-