திருச்செந்தூரில் வடமாநில ஐஸ் வியாபாரியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

திருச்செந்தூரில் வடமாநில ஐஸ் வியாபாரியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

திருச்செந்தூரில் ஐஸ் வியாபாரியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - II தீர்ப்பு அளித்தது. 

ராஜஸ்தான் மாநிலம் பில்வாடா மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் தாரகா (28/2023) என்பவர் திருச்செந்தூரில் தங்கி குல்பி ஐஸ்கிரிம் வியாபாரம் செய்து வந்த நிலையில் அவரது பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் நண்பருமான கந்தசாமி (25/2026) என்பவருடன் கடந்த 17.05.2023 அன்று திருச்செந்தூர் ராஜீவ்கண்ணா நகரில் வைத்து மது அருந்தும் போது கந்தசாமியின் மனைவி குறித்து வினோத் தாரகா அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த கந்தாசாமி, வினோத் தாரகாவை கல்லால் தாக்கி கொலை செய்தததையடுத்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - II ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று கந்தசாமி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், காவல் ஆய்வாளர் இன்னோஷ்குமார் மற்றும் காவல் துறையினரையும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர் முரளிதரன் (தற்போது CSCID கோயம்புத்தூர்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பாராட்டினார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் கொலை வழக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.