கூட்டு பாலியல் செய்யபட்ட இளம்பெண்ணிற்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!
குரும்பூர் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி ஆட்சியரிடம் மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
குரும்பூர் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி ஆட்சியரிடம் மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில்:
மதுரை மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான இளம்பென் ஒருவர் கடந்த ஜுலை 8 ஆம் தேதியன்று மதுரையில் இருந்து குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி செல்வதற்காக பேருந்து மூலம் குரூம்பூர் வந்துள்ளார். குரும்பூரில் இருந்து நாலுமாவடி செல்வதற்காக சுமார் 11:30 மணி ஆட்டோவில் சென்றுள்ளார். பெருங்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட ஐந்து பேர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதனை தொடர்ந்து அப்பெண் குரும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அவரது புகாரின் பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் தப்பிக்காமல் இருப்பதற்காக சட்டரீதியான தண்டனை வழங்க வேண்டும், ஜாமினில் வெளியே வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணம் கிடைத்திட வேண்டும், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் முழுமையான மருத்துவ கவுன்சிலிங் கொடுக்க வேண்டுமென ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.
இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட தலைவர் கலைச்செல்வி, மாநில குழு உறுப்பினர் இனிதா, மாவட்ட குழு உறுப்பினர் முனீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.