வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் உருவப் பொம்மை
வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட மேட்டுக்காட்டில் புதன்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, சுடுமண் உருவப் பொம்மை, கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக 3 குழிகள் தோண்டப்பட்டு, அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 2-ஆம் நாளான புதன்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, உடைந்த நிலையில் சுடுமண் உருவப் பொம்மை, 20-க்கும் மேற்பட்ட கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
இந்த அகழாய்வின் போது, சுமாா் 7 செ.மீ. ஆழத்தில் செங்கற்கள் குவியல் தென்பட்டது. இதன்மூலம், செங்கல் கட்டுமானம் கிடைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுவதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா். மேலும், தொடா்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
--------------------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...