பொதுச் சொத்துகளை பாதுகாப்போம் – தூத்துக்குடியில் பிங்க் பார்க் திறந்து வைத்த மேயர் ஜெகன் பெரியசாமி

பொதுச் சொத்துகளை பாதுகாப்போம் – தூத்துக்குடியில் பிங்க் பார்க் திறந்து வைத்த மேயர் ஜெகன் பெரியசாமி

*பொதுச் சொத்துகளை பாதுகாப்பது அனைவரின் கடமை ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மாநகராட்சிக்கு தகவல் அளிக்கலாம்.., -மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் பூங்கா (பிங்க் பார்க்) தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்து பேசினார்.!*

தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு காலனி 2வது தெருவில் புதிதாக உருவாக்கப்பட்ட மகளிர் பூங்கா இன்று திறந்து வைக்கப்பட்டது.. 

மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாநகராட்சி கணக்குக்குழு தலைவரும்,  தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும், 3வது வார்டு திமுக கவுன்சிலருமான ரெங்கசாமி முன்னிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார். 

பெண்கள் பயன்பாட்டிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‘பிங்க் பார்க்’ பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதியுடன் கூடிய இன்டோர் ஜிம், அவுட்டோர் ஜிம், ஓபன் ஏர் தியேட்டர் (OAT), வாக்கிங் டிராக், பேட்மிண்டன் தளம், பாஸ்கெட் பால் தளம் உள்ளிட்ட விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பெண்கள் யோகா பயிற்சி மேற்கொள்ள தனி வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா, பெண்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பல்வேறு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக பெண்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு பெண்களுக்காக மட்டும் ‘பிங்க் பார்க்’ அமைக்கப்பட்டுள்ளது.

முன்னர் இந்த பகுதி நீர் தேங்கி கிடக்கும் இடமாக இருந்தது. அண்டர்கிரவுண்ட் டிரெயினேஜ் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த இடத்தை சுத்தப்படுத்தி தற்போது அழகான பூங்காவாக மாற்றியுள்ளோம். பொதுமக்கள் தொடர்ந்து இந்த பூங்காவை எப்போது திறப்பீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்ததால் திறந்து வைத்துள்ளோம். பெண்கள் வாக்கிங், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பூங்காவில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதன் பராமரிப்பும் பெண்கள் ஊழியர்களால் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பெண்களுக்கு 100 சதவீத பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், பூங்காவில் மரநடுகை அதிகரிக்கப்படும். வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்க நிழல் ஏற்பாடுகளும் செய்யப்படும். யோகா மற்றும் உடற்பயிற்சி சாதனங்களும் விரைவில் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நலனுக்காக சாலை, குடிநீர், வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் அனைத்து வார்டுகளுக்கும் 24 மணி நேர குடிநீர் விநியோகம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் முக்கியம் என்பதால் இந்த ‘பிங்க் பார்க்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பூங்காவை பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும். மேலும், பொதுச் சொத்துகளை பாதுகாப்பது அனைவரின் கடமை ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மாநகராட்சிக்கு தகவல் அளிக்கலாம்..

நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து மரக்கன்று நட்டு பூங்காவை பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தார். 

நிகழ்ச்சியில், பொறியாளர் சரவணன், மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா, மாமன்ற உறுப்பினர் , ஜாக்குலின் ஜெயா, நாகேஸ்வரி, பவானி, சுப்புலட்சுமி, மரியசுதா, மார்க்சின் அந்தோணி,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.