தூத்துக்குடியில் 16 டாஸ்மாக் கடைகள் மூடல் : வாலிபர் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை வரவேற்று வாலிபர் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடியில் 16 டாஸ்மாக் கடைகள் மூடல் : வாலிபர் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை வரவேற்று வாலிபர் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

தமிழக அரசு தமிழக முழுவதும் 500 மதுபான கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 16 கடைகள் மூடப்படுகின்றன. தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்று தூத்துக்குடியில் இன்று பிரையண்ட் நகர் 1வது தெருவில் மூடப்பட்ட கடை முன்பாக, மாநகரத் தலைவர் ஜேம்ஸ் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். 

போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பல கட்ட எதிர்ப்பு இயக்கங்கள் மூலமாக நடத்தி வருகின்றோம். இதனால் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் என்று தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் மனோஜ், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கார்த்திக், விதோச மாவட்ட தலைவர் எம்.எஸ்.முத்து, சிஐடியு தலைவர்கள் காசி, நாகராஜன், பாலு மற்றும் ஸ்ரீநாத், சுதீஷ், ஆவுடையப்பன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.